ஆறு வாகனங்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் - கடும் நெருக்கடியில் விவசாய அமைச்சு
Colombo
Ministry of Agriculture
By Sumithiran
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயன்படுத்திய ஆறு அரச வாகனங்கள் இதுவரை கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக விவசாய அமைச்சு போக்குவரத்து பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது.
அமைச்சருக்கு இணைக்கப்பட்ட மூன்று வாகனங்களும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.
விவசாய இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய போது அரச தலைவரால் வேறு அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அமைச்சர் மற்றும் அவரது பணியாளர்கள் அதே வாகனங்களுடன் புதிய அமைச்சுக்கு சென்றுள்ளனர்.
இந்த வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்துள்ள போதிலும் இதுவரையில் அவை கையளிக்கப்படவில்லை.
