சற்றுமுன் வியாழேந்திரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை (S. Viyalendiran) பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (9) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் (Colombo Fort Magistrate Court) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு தொடர்பில் அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்காக 15 லட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவத்திற்கு ஆதரவு வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிணையில் செல்ல அனுமதி
அதன்படி, முன்னாள் அமைச்சர் நேற்று (8) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி அவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.
இருப்பினும், சந்தேக நபரால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் இன்று நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
