கைதான முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபரை பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுஹெர பகுதியில் நபர் ஒருவரை கடத்தி கொலை செய்ய சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிஷாந்த உலகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் இவரது கண்காணிப்பில் செயற்படுத்தப்பட்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணைகள்
அத்தோடு, கடத்தப்பட்ட நபர் பல நாட்களுக்கு பின்னர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாமில் இருந்து அனுப்பியிருந்த கடிதத்தின் அடிப்படையில் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னதாகவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், தற்போது முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        