ஒரே விமானத்தில் பயணம் செய்த ஜனாதிபதி அநுரவும் - நாமல் ராஜபக்சவும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநயாக்கவும், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவும், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களின் படி ஜனாதிபதியும், நாமல் ராஜபக்சவும் இருவரும் ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்ட்டடுள்ளது.
மேலும்,நாமல் ராஜபக்ச, திருமண விழா ஒன்றில் பங்கேற்க மாலைத்தீவிற்கு சென்றுள்ளார்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ்
இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 101 இன் வணிக (Business Class)பிரிவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)இன்று (28.07.2025) மாலைதீவுக்கான விஜயமொன்றை மேற்கொணடுள்ளார்.
மாலைதீவு (Maldives) ஜனாதிபதி முகமது முகிதீனின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாலைதீவுக்கு இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, அநுரகுமார மாலைதீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொள்ளவுள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
[GFLOLWN ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        