பாடசாலைக்குள் புகுந்து சிறுவன் மீது தாக்குதல்! இடைநிறுத்தப்பட்ட கான்ஸ்டபிள் கைது
பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து 9 வயது சிறுவனைத் தாக்கிய காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இடைநிறுத்தப்பட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக நவகமுவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம்
சந்தேக நபரான மகளும் தாக்கப்பட்ட சிறுவனும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்து வருவதாகவும் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமி தள்ளப்பட்டு தரையில் விழுந்ததால், அவளது முன் பல்லின் ஒரு பகுதி உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சந்தேக நபரான சிறுமியின் தந்தை, வகுப்பறைக்குள் புகுந்து சிறுவனை தாக்கியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய முறைப்பாடு தொடர்பாக வகுப்பு ஆசிரியரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
