முன்னாள் பாப்பரசரின் இறுதி நிகழ்வு - வெளியானது அறிவிப்பு
Death
Pope Benedict XVI
Vatican
By Sumithiran
முன்னாள் பாப்பரசர் எமரிட்டஸ் 16ம் பெனடிக்ட் அவர்களின் இறுதி நிகழ்வு ஜனவரி 5ஆம் திகதி வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறும் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்தார்.
இறுதி ஊர்வலம் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெறும்.
எளிமையாக நடைபெறவுள்ள இறுதி சடங்கு

முன்னாள் பாப்பரசரின் உடல் ஜனவரி 2, திங்கட்கிழமை முதல் வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் விசுவாசிகள் பிரியாவிடை பெறுவதற்காக வைக்கப்படும் என்று வத்திக்கான் செய்திகள் சனிக்கிழமை தெரிவித்தன.
பாப்பரசர் எமரிட்டஸின் விருப்பத்தின்படி, அவரது இறுதிச் சடங்கு "எளிமையாக இருக்கும்" என்று புருனி குறிப்பிட்டார்.