நான் இதற்கு தான் யுத்தம் செய்தேன் - அடித்துக் கூறும் மகிந்த
படைவீரர் நினைவு நிகழ்வில் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பங்கேற்றதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமாதானத்திற்காகவே தான் யுத்தம் செய்ததாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் இன்று (20) காலை நடைபெற்ற பொதுஜன பெரமுனவின் (SLPP) படைவீரர் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.
சமாதானத்திற்காகவே யுத்தம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், "இன்று நாங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக வந்தோம். ஆம், சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தோம். யாரையும் பிடிப்பதற்காக அல்ல.
நாட்டைப் பாதுகாப்பதற்காகவே யுத்தம் செய்தோம். எதிர்காலத்தில் இவை மீண்டும் நடைபெறுமா? இல்லையா? என்பதைச் சொல்ல முடியாது.
அது வரும் அரசாங்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும். யுத்தம் என்பது ஒரு துயரச் சம்பவம்.
யுத்தத்தில் ஒரு தரப்பு
ஆனால், எங்கள் இராணுவம் வெற்றி பெற்றது. யுத்தத்தில் ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டும் தானே என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
