ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலை சாத்தியமற்றதாக ஆக்கும் ஒரு சூழலை உருவாக்க எல்லா சாத்தியம் வாய்ந்த விசயங்களையும் நாங்கள் மேற்கொள்வோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் கூறினார்.
இவற்றுடன் தொடர்புடைய நாடுகள், ஐ.நா. பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா. பொது சபை ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் உள்பட சர்வதேச நாடுகளுடன் ரஷ்யா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு கூட ஒன்றும் தெரியாது
பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் கட்டமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், அமெரிக்க அரசியல்வாதிகளால் கூட இந்த தாக்குதலுக்கான இலக்கு என்னவென்று தெளிவாக கூற முடியவில்லை என்றார்.

ஆனால், இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கு பின்னணியில், வளைகுடா பகுதியில் உள்ள நாடுகள், ஈரான் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே பிரிவினைகளை உருவாக்குவது ஒரு காரணியாக இருக்க கூடும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |