ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தம்...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரான் மீதான அடுத்தகட்டத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களைத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரை மேலும் தீவிரப்படுத்துவது மத்திய கிழக்கில் அமைந்துள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள் மற்றும் பிற வான் பாதுகாப்பு வெடிமருந்துகளின் இருப்பை ஆபத்தான நிலைக்குக் குறைத்துவிடும்.
இதனாலேயே இந்த முடிவை ட்ரம்ப் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த ஆலோசகர்கள்
ட்ரம்ப் மற்றும் அவரது மூத்த ஆலோசகர்கள் அத்தோடு அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல்களை நிறுத்துமாறு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு ஒரு தற்காலிகமானதா அல்லது இந்த அமைதியான சூழல் நீடிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குக் கூடுதல் வாய்ப்பளிக்கும் ட்ரம்பின் விருப்பத்தையும் மற்றும் தற்போதைய அளவிலான தாக்குதல்கள் அதன் செயல்திறனின் எல்லையை எட்டிவிட்டன என்பதையுமே இத்தீர்மானம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் மீண்டும் மிகப்பெரிய அளவிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கான சாத்தியமான திட்டங்களை அமெரிக்க இராணுவம் ஏற்கனவே தயார் செய்து வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |