மாணவர் அனுமதிக்கு இலஞ்சம் - முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
Sri Lanka Magistrate Court
Sri Lankan Schools
By Sumithiran
கல்கிசை லலித் அதுலத்முதலி கல்லூரியின் முன்னாள் அதிபர் மற்றும் ஊழியர் ஒருவரும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பாதுகாப்பு சாட்சியங்களை அழைக்காமலேயே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2005 ஆம் ஆண்டு கல்கிசை லலித் அதுலத்முதலி கல்லூரியில் தனது பிள்ளையை தரம் 1 இல் சேர்க்க தந்தையிடமிருந்து 50000 ரூபா கோரியது மற்றும் 35000 ரூபாவை பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னாள் அதிபர் ஆரியதாச கமகே மற்றும் ஊழியர் சமன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றவாளிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி தர்ஷன குருப்பு தலைமையிலான சட்டத்தரணிகள் குழு முன்னிலையாகியிருந்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அனோமா சந்தப்பெரும வழக்குத் தொடரில் முன்னிலையாகியிருந்தார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி