சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
covid
death
Dr. Athula Kahandaliyanage
Former Secretary of the Ministry of Health
By Sumithiran
கொவிட் தொற்றுக்கு இலக்கான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரும் முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான டொக்டர் அதுல கஹந்தலியனகே(Dr. Athula Kahandaliyanage) நேற்று (22) இரவு காலமானார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சைப் பிரிவின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு 74 வயது.
அவரது இறுதிச் சடங்குகள் கொவிட் தடுப்புச் சட்டத்தின்படி நடைபெறும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
