வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது
CID - Sri Lanka Police
Sri Lanka Army
By Sumithiran
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ-வகை துப்பாக்கியை வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் பிலியந்தலையில் உள்ள ஒரு கோவிலில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு பிலியந்தலை பகுதிக்குச் சென்று விசாரணைக் கோப்பு தொடர்பாக சந்தேக நபரைக் கைது செய்தபோது குறித்த துப்பாக்கியும் அவரிடம் இருப்பது கண்டறியப்பட்டது.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தலை, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
இது தெடார்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி