தப்பி ஓடிய கோட்டாபய! சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலையோ தாம் வழங்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று இதனை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலையோ வழங்கப்படவில்லை
கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு விவியன் பாலகிருஷ்ணன் இந்தப் பதிலை எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர் மற்றும் சிங்கப்பூர் வருவதற்கு முன்பு மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.
முன்னாள் அதிபர் தலைமறைவாகவில்லை என்றும் அவர் இலங்கை திரும்பியதும் முன்னாள் அதிபர் என்ற அந்தஸ்துக்கு ஏற்ப நடத்தப்படுவார் என்றும் இலங்கை அமைச்சரவைப் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
ஆனால், கோட்டாபய ராஜபக்ச, தனிப்பட்ட பயணமாக ஜூலை 14 அன்று சிங்கப்பூர் வந்தடைந்தார் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு முன்னர் கூறியது.
பதவி இராஜினாமா
தனது குறுகிய கால வருகை வீசாவை நீடித்த நிலையில், அவர் ஓகஸ்ட் 11 வரை அவர் சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் வந்தவுடன் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
