வெனிசுலா ஜனாதிபதியின் நாட்கள் எண்ணப்படுகின்றன!
வெனிசுலாவுடன் அமெரிக்கா போர் தொடுக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கலாம் டொனால்ட் ட்ரம்ப் விளக்கியுள்ளார்.
மேலும், வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்பட்டுவிட்டதாக அவர் மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்கா - வெனிசுலாவுக்கு எதிராகப் போர் தொடுக்கப் போகிறதா என்று ஊடவியளாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "எனக்கு சந்தேகம் உள்ளது. நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் எங்களை மிகவும் மோசமாக நடத்தி வருகின்றனர்" என்று ட்ரம்ப் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேற்கோள் காட்டியுள்ளன.
கரீபியனில் போதைப்பொருள் கடத்தல்
கரீபியனில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அவரது கருத்துக்கள் இவ்வாறு வெளிவந்துள்ளன. அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க இந்த தாக்குதல்கள் அவசியம் என்று ட்ரம்ப் நிர்வாகம் தற்போது விளக்கியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கை போதைப்பொருளை நிறுத்துவது பற்றியது அல்ல, மாறாக நீண்டகால ட்ரம்பின் எதிர்ப்பாளரான மதுரோவை வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்ற கருத்துக்களை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் பகுதிகளில் அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்கா புதிய போரை இட்டுக்கட்டுவதாக வெனிசுலா ஜனாதிபதி குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து நிதியை சுருட்டிய 56 அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் : அம்பலப்படுத்திய தணிக்கை அறிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |