தமிழர் உலகளாவிய சக்தியை உணர்ந்த அநுரவின் முக்கிய எதிர்பார்ப்பு
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் கொண்டுள்ள பலத்தை இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகக்க உற்றுநோக்கிய அளவு கூட தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் விளங்கிக்கொள்ளவில்லை என மூத்த ஊடகவியலாளரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான நிராஜ் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் ஐ.பி.சி தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்த வெளியிட்ட அவர்,
“இலங்கையின் தற்போதைய அரசியல் தலைமைகள் தமிழரின் இருப்பு சார்ந்த விடயங்களை கடந்து சுய அரசியல் நலன்களையே உற்றுநோக்குகின்றனர்.
17 ஆண்டுகளாக தமது அரசிலல் இலக்கு என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. அவர்கள் தாயகத்தில் செய்த அரசிலுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
குறிப்பாக அண்டை நாடான இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசியல்வாதிகள் இலங்கை தமிழர்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் தன்மை சிறிதளவாக இருந்தாலும்அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
யாழில் வைத்து இலங்கை ஜனாதிபதி முன்வைத்த இரு கருத்தில் உள்ள ஈழத்தமிழர் தொடர்பிலான புரிதலில் இருக்கும் நோக்கு நிலை கூட தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகளுக்கு துளி அளவேனும் இல்லை” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |