தமிழ் தேசிய நகர்வில் சுமந்திரன் குழுவை பின்தள்ளிய யாழ்.மக்கள் : அரியநேத்திரன் சுட்டிக்காட்டு
இலங்கை தமிழரசுக் கட்சியில் உள்ள சுமந்திரன் குழு தமிழ் தேசியத்தை தோற்கடிக்க முயன்று தோல்விக்கண்ட வரலாறு என்பது தமிழ் மக்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்த சிறந்த பாடம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பல கோடி செலவு
“ஜனாதிபதி தேர்தலில் நின்ற தன்னை தோற்கடிக்க சஜித் பிரேமதாச தரப்புடன் நின்று தமிழரசுக்கட்சி செயற்பட்டனர். பொதுவேட்பாளரை தோற்கடிக்கவே தமிழரசுக்கட்சியின் ஒரு குழு பல கோடிகளை செலவு செய்து இவ்வாறு செயற்பட்டனர்.
இதில் பெறுமைப்படவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. யாழ் மாவட்டத்திலேயே தனக்கு கூடுதலான வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
அதில் தன்னை தோற்கடிக்க நினைத்த சுமந்திரனின் தொகுதியான பருத்திதுறையில் நான் அவரை தோற்கடித்தோன்.
இதன்போதே என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக கடிதம் வந்தது. தான் அதனை உடனடியாக நிராகரித்து பதில் அனுப்பினேன்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |