பதவி விலகத் தயாராகும் மேல் மாகாண ஆளுநர்: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், தனது பதவி விலகல் தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் பிரபல வர்த்தகரான ஹனீப் யூசுப் மேல் மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆளுநர் பதவியில் நீடித்திருந்த அவர், தனிப்பட்ட மற்றும் குடும்பப் பணிகளின் காரணமாக ஆளுநர் பதவியில் இருந்து விலகப்போவதாக ஜனாதிபதிக்கு தற்போது அறிவித்துள்ளார்.
ஆளுநர் பதவி
இருப்பினும் புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்பதவியில் தான் தொடரவுள்ளதாகவும், ஆளுநர் பதவியில் இருந்து விலகினாலும் சர்வதேச வர்த்தகங்கள் மற்றும் முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட ஆளுநர் என்ற வகையில் தொடர்ந்தும் நாட்டின் நலன் கருதி செயற்படவுள்ளதாகவும் அவர் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆளுநர் பதவியில் தன்னை நியமித்தமை குறித்து ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |