யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்கால் சென்ற யாழ்.பல்கலை மாணவர்கள்
இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
முதன்மையாக முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், நிகழ்வில் பங்கேற்க யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளனர்.



வவுனியா
வவுனியா இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான இன்று வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
நிகழ்வில் பொதுமக்கள், அடியார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போரில் உயிரிழந்த மக்களுக்கு தீபமேற்றி ஆத்மசாந்தி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |