சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்னை - பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று(17.05.2026) மே-17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தோழர் திருமுருகன் காந்தியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் சீர்காழியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில்செல்வன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்
மேலும், நிகழ்வில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. இராசேந்திரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, விடுதலைத் தமிழ் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் குடந்தை அரசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

மேலும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக இயக்கத் தோழமைகளும், கழகத் தோழர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழினத்தின் துயரத்தை நினைவுகூர்ந்து, நீதிக்கான பயணத்தில் என்றும் இணைந்திருப்போம் என்ற உறுதியுடன் நிகழ்வு நடைபெற்றது என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

