வாகனங்களை கையளிக்க மறுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!
இராஜாங்க அமைச்சராக இருந்த வியாழேந்திரனின் தனது அமைச்சுக்குப் பொறுப்பான ஆறு வாகனங்களை இதுவரை வரை கையளிக்காததால் பல சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த அமைச்சில் தனது பிரத்தியோக செயலாளராக தனது மனைவியை நியமித்ததுடன் இணைப்புச் செயலாளராக தம்பியான மயூரனை நியமித்து அவர்கள் இருவருக்கும் இரண்டு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சு பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாநேந்திரன் தனக்கு கொடுக்கப்பட் டிருந்த லான்ஸ் குருசர் மற்றும் அதனுடன் இணைந்த 6 வாகனத்தை மீள அமைச்சுக்கு இன்று வரை பாரம் கொடுக்கவில்லை எனவும் இதனால் காதர் மஸ்த்தான் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் இதற்கு மேலாக இன்னும் ஒரு லான்ஸ் குருசர் வாகனத்தையும் மேலதிகமாக பாவித்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் தனது மனைவியை பிரத்தியோக செயலாளராகவும், தம்பியை இணைப்புச் செயலாளராகவும் நியமித்து மேலும் இரண்டு அரச வாகனங்களை அவரது குடும்பமே பாவித்துள்ளன.
இதற்காக பெரும் தொகை மக்கள் நிதியை செலவு செய்துள்ளதாகவும் ஊடக செயலாளர் மற்றும் இன்னும் சில பதவிகளும் அவருடைய குடும்பத்துகுள் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
