ஐ.நா முன்னாள் அதிகாரி டெனிஸ் ஹாலிடே காலமானார்!
ஈழத்தமிழர்களுக்கு நடந்தது தமிழினப்படுகொலையே என்பதை உலக அரங்கில் உரக்கச் சொல்லி சர்வதேச நீதியைப் பெற்றுத்தரப் போராடிய முக்கியப் பெருந்தகைகளுள் ஒருவரான அயர்லாந்து நாட்டின் கல்வியாளரும் ஐ.நா முன்னாள் அதிகாரியுமான டெனிஸ் ஹாலிடே (Denis Halliday) காலமானார்.
1997 - 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக ஈராக்கில் கடமையாற்றிய இவர், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) சிங்கப்பூருக்கான துணை வதிவிடப் பிரதிநிதியாகவும் பணியாற்றியவர்.
ஈராக் மக்கள் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையின் கொடூர முகத்தையும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் எதிர்த்துத் தனது உயர் பதவியைத் துணிச்சலுடன் துறந்து சர்வதேச அளவில் கவனம் பெற்றவர்.
மனிதவுரிமைப் போராளி
சிறிலங்கா அரசு ஈழமண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையில் மேற்குலக நாடுகளின் பங்கைத் தோலுரித்துக் காட்டிய இவர், டப்ளின், பிரேமன் மற்றும் பெர்லின் மக்கள் தீர்ப்பாயங்களின் அமர்வுகளில் பங்கேற்று, தமிழர்களுக்கு நடந்தது அப்பட்டமான இனப்படுகொலையே என்று உலகிற்குப் பறைசாற்றுவதில் முதன்மைப் பங்காற்றினார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் திகழ்ந்த மனிதவுரிமைப் போராளி டெனிஸ் ஹாலிடேவிற்கு உலகத் தமிழ் சமூகத்தின் சார்பில் வீரவணக்கமும் புகழ்வணக்கமும் செலுத்தபபட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |