முன்னாள் துணைவேந்தர் மீது கடும் தாக்குதல் -வைத்தியசாலையில் அனுமதி
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அவரது உத்தியோகபூர்வ வதிவிடத்திற்கு முன்பாக நேற்று (10) இரவு 10 மணியளவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி, இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதிய கார்
முன்னாள் துணைவேந்தரின் மகன் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் கார், பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை மோதிவிட்டு சென்றதாகவும் இதன்போது அவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலை அடுத்து முன்னாள் துணைவேந்தர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், அவரது மகன் காவல்துறை பாதுகாப்பின் கீழ் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
