இலங்கை பூராகவும் 40 எரிபொருள் நிலையங்கள் மூடல்! அதிரடி நடவடிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
வாடிக்கையாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நாற்பது எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிலைய ஊழியர்களை அச்சுறுத்தி எரிபொருள் பெற்றுக் கொள்ள முயற்சித்தல் மற்றும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற காரணங்களை முன்னிட்டே குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் கொள்வனவு செய்வதற்காக விடுக்கப்பட்ட எரிபொருள் கேள்வியும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தொடர்ந்தும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்திருப்பதாகவும் எரிபொருள் விநியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்