அமெரிக்கா - இஸ்ரேல் நிபந்தனை தவிடுபொடி: ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது...! மொஜ்தபா அதிரடி
ஈரானில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எந்த நாட்டிற்கும் அனுப்பக் கூடாது என அந்நாட்டின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமானால் ஈரான் தனது யுரேனியத்தை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலும் நிபந்தனை விதித்திருந்தன.
இருப்பினும், ஒரு கிராம் யுரேனியமும் வெளிநாடு செல்லாது என்ற ஈரானின் புதிய நிலைப்பாடு, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணிக்கு நேரடி சவாலாக மாறியுள்ளது.
பேச்சுவார்த்தை
இது நடுவராகச் செயல்பட்ட பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இதையடுத்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் பேரலுக்கு 100 டொலரைத் தாண்டியுள்ளது.

இது உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்காவின் திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக ஈரான் வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |