சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட நால்வர் அதிரடி கைது

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Magistrate Court
By Sumithiran Dec 20, 2022 09:43 PM GMT
Report

பண்டாரகம காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த இராணுவ கோப்ரல் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வாகன திருத்துனர், தச்சுவேலை செய்பவர் மற்றும் அரசு நிறுவன ஊழியர் ஒருவரும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய கோப்ரல் பாதுக்க இராணுவ முகாமில் கடமையாற்றுபவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு

சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட நால்வர் அதிரடி கைது | Four Arrested Including A Sri Lanka Army Officer

நேற்றிரவு 11.30 மணியளவில் கம்புருகுடா சந்திக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது கம்புருகொட பக்க வீதியொன்றில் தலைக்கவசம் அணியாத மூவரை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிளை பண்டாரகம காவல்துறை போக்குவரத்து பிரிவின் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கேட்டபோது சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிளில் இருந்த இராணுவ கோப்ரல், “நான் அதிபர் பாதுகாப்புப் பிரிவில் இருக்கிறேன். உங்களை விட சட்டம் தெரியும்.’’என தெரிவித்துவிட்டு மோட்டார் சைக்கிளை சிறிது தூரத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு சென்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

காவலரைத் தள்ளிவிட்டு, கதவை மூட முயன்ற வீட்டின் உரிமையாளர்

சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட நால்வர் அதிரடி கைது | Four Arrested Including A Sri Lanka Army Officer

அப்போது, ​​மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவரின் ஓட்டுனர் உரிமத்தைப் காட்டுமாறு காவல் துறையினர் பலமுறை தெரிவித்த போதிலும், வீட்டின் உரிமையாளர் வந்து, வாயிற்கதவு அருகே இருந்த காவலரைத் தள்ளிவிட்டு, கதவை மூட முயன்றார்.

போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, அங்கு வந்த காவல்துறை குழுவொன்று சந்தேகநபர்கள் நால்வரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை தமது காவலில் எடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026