சுற்றுலா சென்றவேளை அனர்த்தம் : நால்வர் சடலமாக மீட்பு
சுற்றுலா சென்றவேளை தெதுறு ஓயாவில் நீராடிய நால்வர் காணாமற்போன நிலையில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்ட துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா
கிரிபத்கொடையில் இருந்து 10 பேர் கொண்ட குழு சிலாபத்திற்கு சுற்றுலா சென்றுள்ளது. இவ்வாறு சென்ற அவர்கள் சிலாபத்தில் உள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்றிருந்த நிலையில், 5 பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போனவர்களில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நால்வர் சடலங்களாக மீட்பு
இதனை அடுத்து காணாமல் போன ஏனையவர்களை காவல்துறையினர், காவல்துறை உயிர் காப்பு பிரிவினர், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடும் நடவடிகைiயை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் காணாமல் போன நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
images - lankadeepa
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
