சீன விண்வெளி வீரர்கள் சிக்கலில்: பூமி திரும்புவதில் தடை
சீன விண்வெளி வீரா்கள் பூமி திரும்பவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன விண்வெளி நிலையத்தில் செயற்கைக்கோள் சிதறல்கள் மோதியதாக அஞ்சப்படுகின்றது.
இந்தநிலையில், அதில் பணியாற்றி வந்த மூன்று வீரா்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆய்வுப் பணி
விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளுக்காக விண்வெளி வீரா்கள் குழுவை சீனா மாற்றி வருகின்றது.

இதனடிப்படையில், புதிய குழு விண்வெளி நிலையத்தை ஷென்ஷூ-21 விண்கலம் மூலம் சென்றடைந்துள்ளது.
பழைய குழு
இந்தநிலையில், அந்தக் குழுவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஷென்ஷூ-20 விண்கலம் மூலம் பழைய குழு அதே விண்கலம் மூலம் சனிக்கிழமை பூமி திரும்புவதாக இருந்தது.

இருப்பினும், விண்வெளி நிலையத்தை உடைந்த செயற்கைக்கோள்களின் சிதறல்கள் மற்றும் பிற துகள்கள் தாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதைத் தொடா்ந்து வீரா்களின் பாதுகாப்புக்காக அந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |