இஸ்ரேலில் நான்கு சிறுவர்கள் உட்பட 17 பிரெஞ்ச் குடிமக்கள் மாயம்
                                    
                    Emmanuel Macron
                
                                                
                    France
                
                                                
                    Israel
                
                                                
                    Israel-Hamas War
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினளர் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட17 பிரெஞ்சு குடிமக்கள் காணாமல் போயுள்ளனர் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல், அதற்கு பின்னரான தற்போதைய நிலை தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் பேசி வருகிறார்.
நிலைமை கவலைக்கிடம்
இதன்போதே பிரெஞ்ச் குடிமக்கள் காணாமற்போன விடயத்தையும் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன பிரெஞ்சு பிரஜைகளின் நிலை "மிகவும் கவலைக்கிடமாக" இருப்பதாகக் கருதப்படுவதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், சனிக்கிழமை நடந்த தாக்குதலில் உயிரிழந்த பிரான்ஸ் குடிமக்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        