சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Inspector General of Police
By Thulsi Nov 11, 2024 01:15 PM GMT
Report

வீதி விபத்தின் பின்னர் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் (Chunnakam) காவல்துறையினர் கடந்த சனிக்கிழமை விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

அத்துடன் காவல்துறையினர் இரண்டு மாத குழந்தையை தூக்கி வீசியதாக எழுந்த குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை

2மாத குழந்தையை தூக்கி வீசிய சுன்னாகம் காவல்துறை...! அநுரவிடம் பறந்த கோரிக்கை

பணியிலிருந்து இடைநிறுத்தம்

இவ்வாறான பின்னணியிலேயே, காவல்துறை பரிசோதகர், காவல்துறை சார்ஜன்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை | Four Chunnakam Police Suspended

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஒருவர் வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த நபரை கைது செய்ய சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன்படி விசாரணைகளை மேற்கொண்டு குறித்த 4 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா: வெளியான அதிர்ச்சி காணொளி

கல்லறைகளுக்கு நடுவில் சுரங்கம் அமைத்த ஹிஸ்புல்லா: வெளியான அதிர்ச்சி காணொளி

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்