இலங்கையை உலுக்கிய அக்குறணை விபத்து : உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Police Kandy
By Sathangani Oct 20, 2026 05:45 AM GMT
Report

கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குறணை 7ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து தூள் ஏற்றிய வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் இரு பெண்கள் மற்றும் இரு ஆண்கள் உயிரிழந்த நிலையில் குறித்த நால்வரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அரச தரப்பு

ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விவகாரம்: எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய அரச தரப்பு

நால்வர் உயிரிழப்பு

குறித்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய அக்குறணை விபத்து : உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Four Killed In Multi Vehicle Crash In Akurana

உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஜந்தாவது நாளாகவும் போராட்டம்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி ஜந்தாவது நாளாகவும் போராட்டம்

கண்டி தேசிய வைத்தியசாலை

இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவரின் நிலை ஆபத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையை உலுக்கிய அக்குறணை விபத்து : உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல் | Four Killed In Multi Vehicle Crash In Akurana

இதனிடையே, தமது வாகனம் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து நேர்ந்ததாக, கைதான சாரதி தெரிவித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.

முதலில் குறித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றையே மோதியுள்ளதுடன், குறித்த மோட்டார் சைக்கிள் சுமார் 160 மீற்றர் தூரம் இழத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும் 4 முச்சக்கரவண்டிகள், 2 டிப்பர்கள் உட்பட மொத்தமாக எட்டு வாகனத்துடன் இந்த சீமெந்து ஏற்றிய வாகனம் மோதியுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையிலிருந்து சந்தேகநபரான சாரதி சீமெந்து ஏற்றி வந்துள்ளதாகவும், அவர் விபத்தின்போது மதுபோதையில் இருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.

தேர்தல் மேடைகளில் போர் வீரனாகவும் நீதிமன்றில் பாதுகாப்புச் செயலாளராகவும் மாறிய கோட்டாபய : சரத் பொன்சேகா பகிரங்கம்

தேர்தல் மேடைகளில் போர் வீரனாகவும் நீதிமன்றில் பாதுகாப்புச் செயலாளராகவும் மாறிய கோட்டாபய : சரத் பொன்சேகா பகிரங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024