ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் குறைந்தது 14 பிரித்தானியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மூன்று பிரிட்டன் பிரஜைகளை காணவில்லை.
அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய இங்கிலாந்து அதிகாரிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர், மேலும் அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில்
கொல்லப்பட்டவர்களில் தாய் மற்றும் மகள்கள் லியான், நொய்யா மற்றும் யஹெல் ஷராபி, இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றிய லண்டனைச் சேர்ந்த நத்தனெல் யங் மற்றும் புகைப்படக் கலைஞர் டேனி டார்லிங்டன் ஆகியோர் அடங்குவர்.
மூன்று குழந்தைகளின் தந்தை பெர்னார்ட் கோவனும் ஹமாஸ் தாக்குதலில் இறந்தார், அதே போல் இசை விழாவில் பணியாற்றிய ஜேக் மார்லோ, சிப்பாய் யோசெஃப் குடாலியா மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர் யோனி ராபோபோர்ட் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
கொல்லப்பட்டதாக அறியப்பட்ட முந்தைய எண்ணிக்கை 12.இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் இஸ்ரேலிய-பிரிட்டிஷ் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.
