கையும் களவுமாக சிக்கிய கால்பந்து பிரபலம்! பாரிஸ் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தில் 100 கிலோ போதைபொருளுடன் பிரபல கால்பந்து நட்சத்திரம் கைதாகியுள்ளார்.
Aiglon du Lamentin என்ற அணிக்காக விளையாடிவரும் 29 வயதான Jean-Manuel Nedra என்பவரே ஞாயிறன்று 100 கிலோ அளவுக்கான போதை மருந்துடன் சிக்கியுள்ளார்.
சம்பவத்தின் போது இவருடன், இவர் காதலியும் உடன் இருந்ததாகவும் காதலியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அணி நிர்வகம் தலையீடு
இந்த நிலையில், நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் அவரது தொடர்பு குறித்து விசாரிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது என அணி நிர்வாகம் பதிலளித்துள்ளது.
மேலும், அவரது பயணம் தனிப்பட்ட முறையில் அமைந்துள்ளதாகவும், இதில் அணி நிர்வகம் தலையிட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
2012 முதல் கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுவரும் Nedra சர்வதேச அளவில் Martinique அணியில் இடம்பெற்றுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
