பிரான்ஸ் தலைநகரை விட்டு வெளியேறும் மக்கள் - காரணம் இதுதான்...
பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதால் அங்கிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆய்வின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் பரிசில் இருந்து 122,919 பேர் வெளியேறியுள்ளதுடன் பிரான்சின் பல்வேறு நகரங்களுக்கு அவர்கள் குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளனர்.
வீட்டு வாடகை
அதேவேளை சென்ற ஆண்டு ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி பரிஸில் 2,117,702 பேர் வசிக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 2, 240,642 ஆக இருந்தது.
தலைநகர் பரிஸில் நிலத்தின் விலை, வீட்டு வாடகை மற்றும் வாழ்க்கைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே அவர்கள் பரிஸை விட்டு வெளியேறியுள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

