பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை முயற்சி
முதன்முறையாக, பிரான்ஸ்( France) நாடு, அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.
அண்மையில் ரஷ்யா ( Russia) அணு ஆயுத சோதனை மேற்கொண்ட விடயம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தற்போது பிரான்ஸ் மேற்கொண்டுள்ள ஒரு சோதனையும் வெளியாகியுள்ளது.
ரஃபேல் ஜெட் விமானம் ஒன்று அந்த ஏவுகணையை ஏவியதாக பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சரான செபாஸ்டின் லேகோர்னு (Sebastien Lecornu) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பதிலடி
ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பிரான்சும் இந்த சோதனையை நடத்தியுள்ளதால், அது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையா என கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால், உக்ரைனுக்கு (Ukraine) போர் வீரர்களை அனுப்புவதற்கு ஆதரவாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) கருத்துத் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, ரஷ்யா தான் அணு ஆயுத சோதனை நடத்துவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |