ஹமாஸ் கொன்ற பிரான்ஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
France
Israel
Israel-Hamas War
By Jaso
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பிரான்ஸ் பிரஜைகளின் எண்ணிக்கை 31ல் இருந்து 35 ஆக உயர்ந்துள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒன்பது நாட்டவர்களை இன்னும் காணவில்லை என்றும் அவர்களில் சிலரை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்
"அவர்களை விடுவிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"காணாமல் போன அல்லது பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும்" பிரெஞ்சு மக்களின் அனைத்து குடும்பங்களுடனும் தொடர்பில் இருப்பதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.