பிரான்ஸில் அதிபயங்கர சூறாவளி - விடுக்கப்பட்ட எச்சரிக்கை (காணொளி)
பிரான்ஸில் பயங்கர சூறாவளி ஒன்று சுழற்றியடிப்பதைக் காட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.
குறித்த சூறாவளி தாக்கத்தால் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன் பல வீடுகளின் கூரைகள், ஜன்னல்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி தாக்கத்தால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என குறித்த கிராம மேயர் தெரிவித்துள்ளார்.
காற்று எச்சரிக்கை
பிரான்ஸில் குறிப்பாக கரையோரப்பகுதிகளில் பலத்த காற்று எச்சரிக்கை தற்போது விடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பயங்கர சூறாவளி இந்த பகுதியில் வீசுவது 25 வருடங்களில் இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
? Au passage d'un orage, une tornade a été observée ce jeudi peu avant 17h à Pontarion dans la Creuse ! Le phénomène a occasionné quelques dégâts. (© Kan'tin Penot) pic.twitter.com/3HXOT78rKt
— Météo Express (@MeteoExpress) March 9, 2023
