யாழ் பல்கலையில் தீபச்செல்வனின் சயனைட் நாவல் அறிமுக நிகழ்வு
ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை ( 11.09.2025)கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 3மணிக்கு யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கும் கந்தையா பாஸ்கரன்
இதில் பிரதம விருந்திரனராக ஐபிசி தமிழ் மற்றும் றீச்சா குழுமத்தின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன் கலந்துகொள்கிறார். நிகழ்வில் கலந்துகொண்டு யாழ் பல்லைக்கழக மாணவர்களுக்காக சயனைட் நாவலின் 100 பிரதிகளைக் கையளிக்கின்றார்.
நாவலாசிரியரும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய முன்னாள் செயலாளருமான தீபச்செல்வன் நிகழ்வில் ஏற்புரை ஆற்றுகிறார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தயாபரன் லஜீதர் கௌரவ விருந்தினராக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ர. கஜேந்திரன்கலந்துகொள்ள நிகழ்ச்சித் தொகுப்பை கலைப்பீட மூன்றாம் வருட மாணவன் லம்போ கண்ணதாசன் வழங்குகிறார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

