ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தலம் காவல்துறையினரால் கருங்கலே வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர் பங்கதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி