தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் பாரிய ஊழல் மோசடி
தொண்டைமானாறு தேசிய வெளிக்கள பரீட்சைகளில் நிறைய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை தேசிய வெளிக்கள நிலையத்தின் நிகழ்சித் திட்ட முகாமையாளர் பரா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (09.03.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய வெளிக்கள பரீட்சைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தில் இருந்து நடாத்த வேண்டிய தவணைப் பரீட்சைகள் கடந்த 2023 ஆண்டில் இருந்து இடம்பெறவில்லை. வடக்கு மாகாணம் முழுவதிலும் இந்த பாதிப்பை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்திற்குச் சொந்தமான நிதி, யாப்புக்கு முறனாக சட்டமுறையற்று கையாளப்பட்டுள்ளது, இதில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் ஆளுநருக்கும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் அறிக்கை மூலமாக தெரியப்படுத்தியுள்ளோம்.
தேசிய வெளிக்கள பரீட்சைகள் நிலையத்தை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்