திருமண ஆசை காட்டி பெண் காவல்துறை உத்தியோகஸ்தருக்கு நடந்த மோசடி!
பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி காதல் வலையில் சிக்க வைத்து ஒரு லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய காவல்துறை உத்தியோகஸ்தர் தற்போது பதவிய எனும் காவல்துறை பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார், அதேசமயத்தில் இவர் திருமணமானவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோசடி
2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி காவல்துறை நிலையத்தில் பணியாற்றியபோது இந்த காவல்துறை உத்தியோகஸ்தர் பெண் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை காதலித்துள்ளார்.
பின்னர் அவரை திருமணம் செய்வதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பணத்தை பெற்றுக்கொண்டு குறித்த பெண் காவல்துறை உத்தியோகஸ்தரை ஏமாற்றியதாக வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
