பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் மோசடி அம்பலம்
கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு தனியார் பேருந்தில் பணம் கொடுக்காமல் பயணித்த பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை நேற்று புதன்கிழமை (03) மாரகம காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பற்றி தெரியவருவதாவது கொழும்பில் இருந்து மாரகம பிரதேசத்துக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணித்த ஒருவரிடம் நடத்துனர் ரிக்கட் கட்டணத்தை கேட்டபோது அவர் தான் மாரகமகாவல் நிலைய பொறுப்பதிகாரி கட்டணம் தர முடியாது என தெரிவித்து பிரயாணத்தை தொடர்ந்துள்ளார்.
மோசடியை கண்டுபிடித்த நடத்துனர்
இந்த நிலையில் பேருந்து மாரகமவைச் சென்று நிறுத்தப்பட்டதும் அவர் அதில் இருந்து இறங்கிய போது அவரை பேருந்து நடத்துனர் பின் தொடர்ந்தபோது அவர் காவல் நிலையத்துக்குள் உள்நுழைவதை கண்டு அங்கு சென்ற போது காவல் நிலையத்தின் உண்மையான வேறு ஒரு பொறுப்பதிகாரி ஒருவர் சீருடையில் இருப்பதை கண்டு நடத்துனர் திகைப்படைந்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் நடந்ததை தெரிவித்ததையடுத்து காவல்துறை பொறுப்பதிகாரி என போலியாக செயல்பட்ட குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் அவர் கடந்த காலத்தில் மட்டக்களப்பு காவல்நிலையம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ள ஜீவந்த என்பவர் எனவும் இவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகர் என கண்டறிந்தனர்.
கைது செய்யப்பட்ட போலி காவல்துறை பொறுப்பதிகாரி
இதனை தொடர்ந்து போலியாக காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி என மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
