அனைத்து அம்பியூலன்ஸ் வண்டிகளுக்கும் இலவசம்! நெடுஞ்சாலை அமைச்சு தகவல்
Johnston Fernando
SriLanka
Expressway
Ambulance
Highways
Ministry Highways
By Chanakyan
அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வண்டிகள் இலவசமாக பயணிக்க முடியும் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் நெடுஞ்சாலை அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்தோடு அம்பியூலன்ஸ் வண்டிகள், அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் போது கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு அம்பியூலன்ஸிற்கும் கட்டணம் விதிக்கப்பட்டது.
இருப்பினும் கொரோனா காரணமாக நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் சகல அம்பியூலன்ஸ்களிடம் கட்டணம் அறிவிடுவதை மே மாதம் 20 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்