மொட்டு கட்சியினரிடம் இருந்து மீள பெறப்பட உள்ள இலவச வீடமைப்புத் தொகுதி
போராட்டகாரர்களின் தாக்குதல் காரணமாக வீடுகள் உட்பட சொத்துக்களை இழந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை மீளப்பெறும் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை வியத்புர வீடமைப்புத் தொகுதியில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவர்கள் எதிர்வரும் ஜூலை மாதம் வரை மாத்திரமே இலவசமாக தங்கியிருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், அந்த வீடுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தினால், வீடுகளுக்கான வாடகை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அறவிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மாத வாடகை சுமார் 70 ஆயிரம்
இலவச வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடொன்றின் மாத வாடகை சுமார் 70 ஆயிரம் ரூபா. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடமைப்புத் தொகுதியில் உள்ள வீடுகளை கொள்வனவு செய்ய விரும்பினாலும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஏற்கனவே அந்த வீடுகளை கொள்வனவு செய்ய தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு வீட்டின் விலை சுமார் இரண்டு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் தாக்குதல்கள் மற்றும் தீ வைப்பு சம்பவங்களால் பொதுஜன பெரமுனவின் 82 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்தனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
