குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு கிடைக்கவுள்ள இலவச வசதி!
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Electricity Prices
By Pakirathan
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் பெனல்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கைகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த செயற்திட்டத்தின் மூலம், 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய கட்டத்திற்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திட்டம்
இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கும், இரண்டாவது கட்டத்தில் 15,000 வீடுகளுக்கும் சோலர் பெனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி