அரசாங்க வசமான ஜனாதிபதி மாளிகைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு
முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து மீண்டும் கையகப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்க அலுவலகங்களாகவோ அல்லது வருவாய் ஈட்டும் நோக்கங்களுக்காகவோ பயன்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கட்டிடங்கள் பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும் வகையில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை நிதி அமைச்சு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களுக்கான வெற்றி
அரசாங்க நிதியில் பராமரிக்கப்படும் இந்த சொத்துக்களை பொதுமக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருந்த இந்த மதிப்புமிக்க வீடுகளை, முழு மக்களுக்கும் பயனளிக்கும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது மக்களின் வெற்றி என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளியேறிய முன்னாள் ஜனாதிபதிகள்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தத உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாராதுங்க இன்னும் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைக்காத நிலையில், இரண்டு மாதங்கள் கால அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
