ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக யாழ். மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்
ஜனாதிபதி நிதியத்தின் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழக்கப்பட்டுள்ளது.
இதற்காக மாணவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை நேற்று (14.11.2026) பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணக்கருவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இலவசமாக அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
800க்கும் மேற்பட்ட மாணவர்கள்
இத்திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தின் Stroud Rotary Club மற்றும் Wish Foundation ஆகிய அமைப்புகள் அனுசரணை வழங்குகின்றன.

இதன் முதற்கட்ட நடவடிக்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும், இரண்டாம் கட்ட நடவடிக்கை ருஹுணு பல்கலைக்கழகத்திலும் முன்னெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, மூன்றாம் கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 526 மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் தேவைப்படுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்களுக்கு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |