மொட்டு கட்சியை நம்பி ஏமாந்தவர்களுக்கு சுதந்திர கட்சி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு
கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அரசியல்வாதிகளை மீண்டும் தாய்க்கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party )பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake) கொழும்பில் நேற்று (2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏராளமான முன்னாள் அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் மொட்டுக் கட்சியை நம்பி அதன் பின்னால் சென்றிருந்தனர்.
ஓரளவுக்கு பலவீனம்
இதன் காரணமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஓரளவுக்கு பலவீனமடைந்தது உண்மை எனினும் மொட்டுக் கட்சிக்கு பின்னால் சென்றவர்களை இன்று அக்கட்சி கைவிட்டுள்ளது.
இன்னும் சிலர் அக்கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளனர் அவ்வாறானவர்கள் இன்று தங்கள் அரசியல் எதிர்காலம் குறித்து எந்தவொரு தெளிவான தீர்மானமும் இன்றி நட்டாற்றில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களை மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம், அதன் ஊடாக சுதந்திரக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |