சிறீதரனை இடைநிறுத்த திரைமறைவில் நடக்கும் டீல்

Sri Lankan Tamils M A Sumanthiran S Shritharan Sonnalum Kuttram ITAK
By Independent Writer Jan 03, 2025 06:00 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

கடந்த தேர்தல்களில் தமிழரசுக்கட்சியில் (ITAK) இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுவதாகவும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக செயற்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக தமிழரசுக் கட்சி தலைமைகள் அறிவித்திருந்தன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவு தெரிவித்து பிரசாரங்களில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் முன்னாள் உறுப்பினரான பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளராக களமிறங்கினார்.

இதனால் பொது வேட்பாளர் தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்திருந்தனர்.

பொதுவேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமைகள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த சிறீதரனுக்கும் (S. Shritharan) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது விட்டமைக்கான காரணம் என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளதுடன் கட்சியின் யாப்பு என்பது எல்லோருக்கும் சமமானதாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தராக பிதற்றிக் கொள்பவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவருமான சுமோ கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் இறுதியில் பல அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி “கடந்த தேர்தலில் தமிழரசுக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

கட்சியின் உறுப்பினரான சிவமோகன் மீது தேர்தல் காலங்களில் கட்சியினுடைய வேட்பாளர்களை நேரடியாக தாக்கி ஊடக சந்திப்புக்களை நடாத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி விளக்கம் கோருவது என்று தீர்மானித்துள்ளோம்.

அரியநேத்திரன் ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருக்கிறார் அவரையும் கட்சியிலிருந்து விலக்கலாம் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் வேறுகட்சிகள் மற்றும் குழுக்களுக்காக பிரசாரம் செய்தவர்கள் மற்றும் கட்சியின் முடிவுகளுக்கு மாறாக ஜனாதிபதி தேர்தலின் போது பிரசாரம் செய்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் சிலருக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கிறது” என தெரிவித்தார்.

இதேவேளை இதேவேளை சி.வி.கே சிவஞானமும் (C. V. K. Sivagnanam) ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அரியநேத்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்ற ப. சத்தியலிங்கம் பதவி விலகினால் அந்த இடத்திற்கு சுமோ நியமிக்கப்பட்டார் எனவும் சிறீதரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரது எம்.பி பதவி பறிக்கப்படும் நிலையில் 6 மாதங்களில் சுமோ நாடாளுமன்றத்திற்கு செல்வார் எனவும் அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்கையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவி சிறீதரனுக்கு வழங்கப்படக் கூடாது என்பதற்காக நீதிமன்றில் வழக்குத் தொடுத்த பின்னணியில் இருந்த மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைமைகள் இந்த விடயம் தொடர்பில் சிறீதரனுக்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடாமல் இருப்பதற்கு பின்னால் ஏதோவொரு இரகசிய திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

எனவே தமிழரசுக்கட்சி தலைமைகள் சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மாற்றுவதுடன் சுயலாப அரசியலுக்காக தனிப்பட்ட நபர்களை வஞ்சிக்கவும் வசைபாடவும் தயங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.......

ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

ஜனாதிபதி அநுரவிடம் சி.சிறீதரன் விடுத்த கோரிக்கை

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் - சர்ச்சையை கிளப்பிய யாழ். எம்.பியின் பேட்டி

முன்னாள் சபாநாயகர் ஒரு மருத்துவர் - சர்ச்சையை கிளப்பிய யாழ். எம்.பியின் பேட்டி

தோல்விக்கு காரணம் தொலைபேசியா...! சின்னத்தை மாற்ற முயலும் சஜித் தரப்பு

தோல்விக்கு காரணம் தொலைபேசியா...! சின்னத்தை மாற்ற முயலும் சஜித் தரப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024