தாராளமாக வெளியேறுங்கள் -மைத்திரி தரப்புக்கு அரசாங்கம் அறிவிப்பு
அரசாங்கத்தின் கொள்கையுடன் ஒன்றிணைந்து செயற்பட விருப்பமில்லாவிடின் சுதந்திர கட்சி தாராளமாக அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதை பலமுறை பகிரங்கமாக அறிவித்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinge) தெரிவித்தார்.
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக உள்ள சுதந்திர கட்சியின் செயற்பாடுகள் கூட்டணி அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது. அரச வரபிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சித்து மக்களை தவறாக வழி நடத்துவது முறையற்ற செயற்பாடாகும்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எத்தரப்பினருடன் கூட்டணியமைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
எனவே அவர்கள் தாரளமாக அரசிலிருந்து வெளியேறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.