நாளைய தேர்தலில் சுதந்திரக் கட்சியின் ஆதரவு யாருக்கு..! வெளியான அறிவிப்பு
Maithripala Sirisena
Sri Lanka Freedom Party
President of Sri lanka
Sri Lankan political crisis
By Kanna
சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் சுதந்திரக் கட்சி எவருக்கும் வாக்களிக்க போவதில்லை என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன முன்னதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், புதிய அதிபரைத் தெரிவு செய்வதில் சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
